இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'மதுரை அரசு மருத்துவமனையில் விபத்துகளில் காயமடைந்து சிகிச்சைபெற்று வந்த பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா, ஸ்ரீவில்லிபுத்தூர் ரவிச்சந்திரன், ஒட்டன்சத்திரம் பழனியம்மாள், உடுமலைப்பேட்டை ஆறுமுகம், செல்லத்தாய் ஆகிய ஐந்து பேரும் மின்தடையால் செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) இயங்காமல் உயிரிழந்தனர்
சுகாதாரத் துறையின் அலட்சியமான செயல்பாட்டால் அப்பாவி நோயாளிகள் ஐந்து பேரின் உயிர் பறிபோய் இருப்பது கண்டனத்திற்குரியது. பழனிச்சாமி அரசின் நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் சான்றாக அமைந்துள்ளது.
மேலும் நோயாளிகள் பலியாவதற்கு காரணமானவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுப்பதோடு மட்டும் இல்லாமல் அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.