ETV Bharat / city

மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு மனு: தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - தமிழ்நாடு அரசு

சென்னை: அரசு நலத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓதுக்கீடு கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

differently abled persons allocation case

author img

By

Published : Sep 13, 2020, 12:11 AM IST

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, அரசின் திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து விழுக்காடு ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அரசின் நிதியுதவி தொடர்பான திட்டங்களில் 25 விழுக்காடு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை முறையாக அமல்படுத்த கோரி கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றுக்கு கோரிக்கை மனு கொடுத்தும், எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளின் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அமர்வில், ஒரு ஆண்டுக்கு முன்பாக அளித்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை, ஆறு வாரத்துக்குள் சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.