தமிழக காவல்துறையின் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவின் டிஜிபியான சுனில்குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 1988ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான சுனில்குமார் இன்று ஓய்வு பெறுவதையொட்டி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா நடந்தது. அப்போது வழங்கப்பட்ட காவல்துறை அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார்.
நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
1961ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் பிறந்த சுனில்குமார், தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். இவர், 1988ஆம் ஆண்டு, ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டில் பணிக்காக நியமிக்கப்பட்டார். பின்னர் பல பொறுப்புகளில் இருந்த அவர், சென்னை போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையராக இருந்தபோது, உடலுறுப்பு தானத்திற்காக சென்னையில் பசுமை வழித்தடம் ஏற்பாடு செய்யப்பட்டு, தானம் அளிக்கப்பட்ட உடல் உறுப்பு மிகுந்த நெரிசலுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உறுப்புதான விழிப்புணர்வின் விதை- டிஜிபி சுனில் குமார்!