ETV Bharat / city

ஐபிஎஸ் அதிகாரிகள் ஓரம்கட்டப்படுவது ஏன்? தலைமை செயலாளருக்கு டிஜிபி ஜாங்கிட் பரபரப்பு கடிதம் - தலைமை செயலாளர்

சென்னை: தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உரிய இடமளிக்காமல், குரூப்-1 அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன் என்று ஐபிஎஸ் அதிகாரியும் டிஜிபியுமான ஜாங்கிட் தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

dgp
author img

By

Published : Apr 1, 2019, 5:18 PM IST

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,”1985ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியானநான், தற்போது மாநகர போக்குவரத்து கழக ஊழல் கண்காணிப்பு இயக்குனராக உள்ளேன். டிபிஎஸ் அதிகாரிகளின் ஆதிக்கத்தால் தமிழக காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் இருப்பதற்கு நானே ஒரு சான்று. இந்திய காவல் பணிகளின் விதிகள் தமிழகத்தில் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது.

தமிழக கேடரில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை எனும் நிலை இருந்தால் மட்டுமே டிபிஎஸ் எனும் குரூப்-1 அதிகாரிகளை நியமிக்க விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலில் இருக்கும்போது, சட்டம் ஒழுங்கு போன்று முக்கிய பொறுப்புகளுக்கு டிபிஎஸ் அதிகாரிகளை நியமிப்பது உச்ச நீதிமன்ற உத்தரவின் சட்டவிதிகளை மீறுவதாகும்.

தமிழக காவல் துறையில் தற்போது விதிகளை மீறி காவல் கண்காணிப்பாளர்கள், துணை கமிஷனர்கள் போன்ற பொறுப்புகளில் 76 பேரில் 36 பேர் டிபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பதவியில் 15 பேர், சென்னை பெருநகர காவல் துறையில் 4 துணை கமிஷனர்கள், பிற மாநகர்களில் 4 துணை கமிஷனர்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் 13 அதிகாரிகளும் என தமிழகம் முழுவதும் மொத்தம் 36 டிபிஎஸ் அதிகாரிகள் தற்போது பதவியில் உள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்க வேண்டிய இடத்தில், சட்ட விதிகளை மீறி டிபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழககாவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி முக்கிய பதவிகளில் நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதேபோல், உள்துறை செயலாளர், சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் மத்திய ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்திற்கும் டிஜிபி ஜாங்கிட் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். பதவியில் உள்ள டிஜிபி ஒருவர், காவல் துறையில்சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பிய விவகாரம் போலீசார் இடையேயும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குரூப்-1 அதிகாரிகளுக்கே முன்னுரிமை தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஓரம்கட்டப்படுவது ஏன்? தலைமை செயலாளருக்கு டிஜிபி ஜாங்கிட் பரபரப்பு கடிதம்*

தமிழக காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உரிய இடமளிக்காமல், குரூப்-1 அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன் என்று ஐபிஎஸ் அதிகாரியும் டிஜிபியுமான ஜாங்கிட் தலைமை செயலாளருக்கு பரபரப்பு  கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.தமிழக காவல் துறையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்படும் ஐபிஎஸ் அதிகாரிகள், குரூப்-1 தேர்வுகள் மூலம் தேர்வாகும் டிபிஎஸ் எனும் அதிகாரிகளும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி  வருகின்றனர்.  சில ஆண்டுகளாக ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பதவிகளை தமிழக டிபிஎஸ் அதிகாரிகளை கொண்டு நிரப்பப்பட்டு வருவதாக ஐபிஎஸ் அதிகாரிகள் சார்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள்  முன்வைக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், ஐபிஎஸ் அதிகாரிகளின் கோரிக்கையை வலு சேர்க்கும் விதமாக, ஐபிஎஸ் அதிகாரியும், மாநகர போக்குவரத்து துறை ஊழல் கண்காணிப்பு இயக்குநராக உள்ள டிஜிபி ஜாங்கிட் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா  வைத்தியநாதனுக்கு பரபரப்பு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், 1985 ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான  நான், தற்போது மாநகர போக்குவரத்து கழக ஊழல் கண்காணிப்பு இயக்குனராக உள்ளேன். டிபிஎஸ் அதிகாரிகளின் ஆதிக்கத்தால் தமிழக காவல் துறையில் ஐபிஎஸ்  அதிகாரிகளுக்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் இருப்பதற்கு நானே ஒரு சான்று. இந்திய காவல் பணிகளின் விதிகள் தமிழகத்தில் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. தமிழக கேடரில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை எனும் நிலை இருந்தால் மட்டுமே டிபிஎஸ் எனும் குரூப்-1 அதிகாரிகளை நியமிக்க விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் போது, சட்டம் ஒழுங்கு போன்று முக்கிய பொறுப்புகளுக்கு டிபிஎஸ் அதிகாரிகளை நியமிப்பது உச்ச நீதிமன்ற உத்தரவின் சட்டவிதிகளை மீறுவதாகும்.  தமிழக காவல் துறையில் தற்போது விதிகளை மீறி காவல் கண்காணிப்பாளர்கள், துணை கமிஷனர்கள் போன்ற பொறுப்புகளில் 76 பேரில் 36 பேர் டிபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பதவியில் 15 பேர், சென்னை பெருநகர காவல் துறையில் 4 துணை கமிஷனர்கள், பிற மாநகர்களில் 4 துணை கமிஷனர்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் 13 அதிகாரிகளும் என  தமிழகம் முழுவதும் மொத்தம் 36 டிபிஎஸ் அதிகாரிகள் தற்போது பதவியில் உள்ளனர். ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்க வேண்டிய இடத்தில், சட்ட விதிகளை மீறி டிபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழக  காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி முக்கிய பதவிகளில் நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கடிதம் எழுதியுள்ளார்.இதேபோல், உள்துறை செயலாளர், சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் மத்திய ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்திற்கும் டிஜிபி ஜாங்கிட் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். பதவியில் உள்ள டிஜிபி ஒருவர், காவல் துறையில்  சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பிய விவகாரம் போலீசார் இடையேயும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.