சென்னையில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி துக்ளக் இதழின் பொன்விழா நடைபெற்றது. இதில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் சிறப்பு அழைபாளர்களாக கலந்துகொண்டனர். விழாவில் பேசிய ரஜினி, ’1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண பட உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், அவற்றில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும்’ கூறினார்.
ரஜினியின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் தற்போது பெரும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது.
மேலும், இதனால் ஆத்திரமடைந்த திராவிடர் விடுதலைக் கழகத்தினர், "பெரியார் பற்றிய பொய்யான தகவலை கூறி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் ரஜினிகாந்த் வதந்தி பரப்புகிறார்" என்று குற்றஞ்சாட்டினர். அதுமட்டுமின்றி, ரஜினிகாந்த் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகாரும் அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவே, ரஜினிகாந்த் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் உமாபதி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க:
’சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் ரஜினி வீரர்’ - எஸ்.வி. சேகர் சிறப்புப் பேட்டி