செவிலியரின் அன்னை என்று போற்றப்படும் ’புளோரன்ஸ் நைட்டிங்கேல்’ நினைவாக அவரின் பிறந்தநாளான இன்று உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இது குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டர் பதிவில், ”அன்னையரைப் போல் பரிவோடு தன்னலம் கருதாது மக்களைக் காக்கும் மகத்தான சேவைபுரியும் செவிலியர் நல்ல உடல் நலத்தோடு நலம்பெற்று வாழ எனது அன்பார்ந்த உலக செவிலியர் தின வாழ்த்துகள்.
இக்கரோனா காலத்திலும் இரவு-பகல் பாராமல் அயராது சேவையாற்றும் செவிலியரின் அர்ப்பணிப்பிற்குத் தலைவணங்குகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கரோனா சிறப்பு வார்டில் அடிப்படை வசதி இல்லை - செவிலியர் குற்றச்சாட்டு