ETV Bharat / city

தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியது.. அதீத கனமழை எச்சரிக்கை... - Tamil Nadu Rains LIVE Updates

சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியதால், அடுத்த சில மணி நேரங்களுக்கு அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
author img

By

Published : Nov 11, 2021, 5:00 PM IST

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழ்நாட்டை நோக்கி நெருங்கி வந்த நிலையில், தற்போது சென்னைக்கு அருகே கரையை கடக்க தொடங்கியது. ஆந்திரா கடற்பகுதிக்கும் தமிழ்நாடு கடற்பகுதிக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், முக்கிய எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழ்நாடு கடற்பகுதிக்கும் இடையில் கடந்து செல்லும். இதனால் இயல்பை காட்டிலும் அதீத கனமழை பெய்யும்.

குறிப்பாக, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை தீவிரமாக இருக்கும். இந்த நேரத்தில் காற்று 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம். கடற்கரை அருகே செல்ல வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் மாலை 6 மணிவரை விமான சேவைகள் நிறுத்தம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.