சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை - புதுச்சேரி இடையே அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் கரையைக் கடந்தது. வட தமிழ்நாடு பகுதியில் நிலைகொண்டுள்ள நிலையில் மேற்கு, வடமேற்குத் திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுபெற்று, இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, தென்மேற்கு வங்கக் கடல், வட தமிழ்நாடு கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ளது.
மேலும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தென்கிழக்குத் திசையில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கிறது. இது புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை. சாராசரியாக இயல்பைவிட இந்த ஆண்டு மழை அதிகமாகக் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க:'சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கிடையாது; ஆனால்...' - பாலச்சந்திரன்