இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் அனுப்பியுள்ள கடிதத்தில், ”ஊரடங்கு காலத்தில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தன்னார்வமாக மக்களுக்கானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் தன்னார்வப் பணிகளில் ஈடுபட அரசிடம் ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, ஆர்வமுள்ள 50 வயதிற்கு உட்பட்ட ஆசிரியர்களை தன்னார்வப் பணிகளில் ஈடுபடுத்தலாம்.
விருப்பமுள்ள ஆசிரியர்கள், மக்கள் கூடும் இடங்களில் தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க உதவும் பணிகளிலும், கரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபடலாம். அப்படிப்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட ஆசிரியர்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும்“ எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு - வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தையற்கலைஞர்கள்!