ETV Bharat / city

அக்னிபத் விவகாரம்: சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது! - blockade Shastri Bhavan

அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

சாஸ்திரிபவனை முற்றுகையிட முயன்ற  ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

author img

By

Published : Jun 20, 2022, 7:39 PM IST

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. இந்நிலையில் இந்திய ஜனநாயக சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள சாஸ்திரி பவனை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும், மோடியின் உருவப்படத்தை எரிக்க முயன்றனர்.

பின்னர் சாஸ்திரி பவனை முற்றுகையிட முடியாதபடி தடுப்பு வேலியை அமைத்து, போராட்டத்தை தடுத்து நிறுத்தியதால் காவல் துறையினருக்கும் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில், அவ்வமைப்பின் தென் சென்னை மாவட்டத் தலைவர் சுரேஷின் இடது கையில் படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற இளைஞர்கள் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

இதையும் படிங்க: 'பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்' - ஓபிஎஸ் எழுதிய கடிதம் நீதிமன்றத்தில் தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.