ETV Bharat / city

தீவுத் திடலில் பட்டாசு விற்பனை மந்தம் - வேதனையில் வியாபாரிகள் - cracker sales was dull

சென்னை தீவுத் திடல் மைதானத்தில் அமைந்துள்ள மொத்த பட்டாசு விற்பனை கடைகளில் பட்டாசு விற்பனை மிகவும் மந்தமாக உள்ளதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பட்டாசு விற்பனை
பட்டாசு விற்பனை
author img

By

Published : Nov 4, 2021, 8:56 AM IST

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடல் மைதானத்தில் மொத்த பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 52 கடைகளில் வண்ணமயமான பட்டாசுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் 120க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது குறைவான கடைகளில் மட்டுமே விற்பனை நடைபெறுகிறது.

இருப்பினும், கடந்தாண்டு கரோனா தொற்று பாதிப்பு காரணமாக 40 கடைகளாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் கடைகள் தற்போது அதிகரித்துள்ளது. கடைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் விற்பனை குறைவாகவே உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

விற்பனை குறைவு

கடந்த காலங்களில் தீபாவளியை முன்னிட்டு சுமார் 10 கோடி ரூபாய்க்கு வணிகம் நடைபெறும். தற்போதைய சூழலில் 4.5 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெறுவதே சந்தேகம் என பட்டாசு கடைக்காரர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பட்டாசு விற்பனை

பட்டாசுகளுக்கான நேரக் கட்டுப்பாடு, உச்ச நீதிமன்றம் விதித்த தடை காரணமாக எழுந்துள்ள குழப்பம், கடந்த சில நாட்களில் பெய்த மழை ஆகியவற்றால் பட்டாசு விற்பனை சரிவு கண்டுள்ளதாக கூறுகின்றனர்.

பொதுமக்கள் அதிகளவில் வெளியூர் செல்வதாலும், பட்டாசு வாங்குவோர் குறைந்துள்ளதாகவும், சூழல் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்திருப்பதாலும் விற்பனை குறைந்துள்ளதாக சில வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த முறை கரோனா தொற்று பாதிப்பு, மழை காரணமாக பட்டாசு உற்பத்தி குறைந்து, அதன் வரத்து குறைந்துள்ளது. இதனால் பட்டாசுகளின் விலையும் அதிகரித்துள்ளது. பட்டாசுக்களின் விலை கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளதால் குறைவாகவே வாங்கியதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: மகிழ்ச்சியான, பாதுகாப்பான தீபாவளி - மருத்துவர் சாந்தி மலர் கூறும் அறிவுரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.