ETV Bharat / city

நடன இயக்குநர் சங்கத் தேர்தலில் தினேஷ் மாஸ்டர் அணி வெற்றி - Dancer Association

சென்னை: நடன இயக்குநர் மற்றும் நடனக் கலைஞர்கள் சங்க தேர்தலில் தினேஷ் மாஸ்டர் தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது

தினேஷ் மாஸ்டர் அணி வெற்றி
author img

By

Published : Jul 15, 2019, 12:43 PM IST

நடன இயக்குநர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது. இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற்றது. தபால் மூலம் 70 வாக்குகளும், நேரடியாக 503 வாக்குகளும் பதிவாகியிருந்தன. மொத்தம் பதிவான 573 வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி அலுவலர்கள் தற்போது முடிவுகளை அறிவித்துள்ளனர்.

தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தினேஷ் மாஸ்டர், 322 வாக்குகளைப் பெற்று 75 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடனக் கலைஞர் சங்கத்தில் துணைத் தலைவர் உட்பட மற்ற ஏழு முக்கிய பொறுப்புகள் தினேஷ் மாஸ்டர் தலைமையிலான அணிக்கே சென்றுள்ளன.

Intro:நடன இயக்குனர் சங்க தேர்தலில் தினேஷ் மாஸ்டர் தலைமையிலான அணி வெற்றிBody:தியாகராய நகரில் உள்ள நடன இயக்குனர் சங்கத்தில் நடைபெற்ற நடன இயக்குனர்கள் மற்றும் நடன கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்றது . இந்த தேர்தலுக்கான வாக்கு பதிவு காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 30 அளவில் முடிந்த நிலையில் 503 வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது . கமல உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஹாசன் தன் வாக்கை பதிவு பதிவு செய்தனர்.

ஏற்கனவே தபால் வாக்குகள் 70 பதிவு செய்திருந்தது . மொத்தம் 573 வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி தேர்தல் முடிவுகளை அறிவித்துள்ளார்.

தலைவராக தினேஷ் மாஸ்டர் 75 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் 322 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிட தக்கது. மேலும் நடன கலைஞர் சங்கத்தின் முக்கிய 7 பொறுப்புகளும் தினேஷ் மாஸ்டர் தலைமையிலான அணியே வெற்றி பெற்றுள்ளது. துணை தலைவராக சுஜாதா பாபு , நந்தினி மனோகர் இணை செயலாளராக மீராஷ் மற்றும் இ. பாபு , பொது செயலாளராக மதன் கார்த்திக் மற்றும் பொருளாளராக சதீஷ் பாபு. Conclusion:இதனை தொடர்ந்து 39 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு அதில் 14 பேர் மட்டுமே செயற் குழு உறுப்பினராக தேர்வு செய்ய பட்டுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.