ETV Bharat / city

அப்பாவை பழைய பாரதிராஜாவாக பார்க்கலாம்... மனோஜ் பாரதிராஜா... - எம்ஜிஎம் மருத்துவமனை எங்களுக்கு கோவில் போன்றது

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா இன்று வீடு திரும்புகிறார்.

அப்பாவை பழைய பாரதிராஜாவாக பார்க்கலாம், ஆரோக்கியமாக உள்ளார்

author img

By

Published : Sep 9, 2022, 2:17 PM IST

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 23ஆம் தேதி தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். அதன்பின் மேல் சிகிச்சைக்காக அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் 26ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரலில் அதிகமாக நீர் சேர்ந்துள்ளதால் அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் அவர் முழுமையாக குணமடைந்து இன்று (செப். 9) வீடு திரும்ப உள்ளார். இதுகுறித்து மருத்துவர் சாமிகண்ணு கூறுகையில், எங்களை உற்சாகப்படுத்த கூடிய அளவிற்கு பாரதிராஜா இருக்கிறார். அவரிடம் பேசினால் எங்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறது. அவர் குணமடைந்து வீட்டிற்கு செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் இரண்டு வாரத்திற்கு மருத்துவ கண்காணிப்பு தேவை எனத் தெரிவித்தார்.

அதன்பின் பேசிய பாரதிராஜாவின் மகன் மனோஜ், "அப்பா ஆரோக்கியமாக இருக்கிறார். பழைய பாரதிராஜவாக நீங்கள் பார்க்கலாம். முன்பு போல் கேலி, கிண்டல் என்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார். எம்ஜிஎம் மருத்துவமனைக்கு ரொம்ப நன்றி. பத்திரிக்கைகளில் மருத்துவச் செலவிற்கு பணம் இல்லை என்றெல்லாம் எழுதியுள்ளனர். என்னுடைய குடும்ப பணத்தில் இருந்து தான் மருத்துவமனைக்கு செலவு செய்து இருக்கிறோம். ஆனால், சில ஊடகங்கள் பணம் இல்லை என்று சொல்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. ஊடகங்கல் உண்மை செய்திகளை மட்டும் வெளியிடுங்கள்.

அப்பாவை பழைய பாரதிராஜாவாக பார்க்கலாம் ஆரோக்கியமாக உள்ளார்

இன்னும் 4 படங்கள் மீதி இருக்கிறது. கூடிய விரைவில் நடிக்கப் போகிறார். அதிகமாக தொலைபேசியில் பேசுவதற்கு நாங்கள் அனுமதிக்கவில்லை. மற்றபடி நேரில் வந்து பல பழைய நண்பர்கள் பார்த்து பேசினார்கள். இசையமைப்பாளர் தீனா, இயக்குநர் ஆர்கே.செல்வமணி, நடிகை ராதா, ராதிகா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நேரில் வந்து பார்த்தார்கள் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெளியானது “சூர்யா 42” படத்தின் மோஷன் போஸ்டர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.