சென்னை: கடலில் சுங்கத்துறை அலுவலர்கள் ரோந்துப்பணி செல்வது வழக்கம். அந்தவகையில் கடந்த ஜன.30ஆம் தேதி சென்னை கடற்கரைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆலிவ் ரிட்லி (Olive ridley turtle) என்கிற கடல் ஆமை ஒன்று மீன்பிடி வலையில், சிக்கித்தவித்துக் கொண்டிருந்து உள்ளது.
அதனைக் கண்ட சுங்கத்துறை அலுவலர்கள் வலையில் சிக்கிய ஆமையைத் தூக்கிப்படகில் வைத்து, வலைகளை அறுத்தெறிந்துவிட்டு, ஆமையைப் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் விட்டுவிட்டனர்.
இதுதொடர்பாக சுங்கத்துறை அலுவலர்கள் ஆலிவ் ரிட்லி ஆமையை மீட்கும் காணொலியை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.
ட்விட்டரில் பாராட்டு
-
Very well done @ChennaiCustoms. Heartwarming, indeed. https://t.co/b7ycrrNjhU
— Nirmala Sitharaman (@nsitharaman) February 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Very well done @ChennaiCustoms. Heartwarming, indeed. https://t.co/b7ycrrNjhU
— Nirmala Sitharaman (@nsitharaman) February 2, 2022Very well done @ChennaiCustoms. Heartwarming, indeed. https://t.co/b7ycrrNjhU
— Nirmala Sitharaman (@nsitharaman) February 2, 2022
இதனை ட்விட்டரில் பார்த்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'சென்னை சுங்கத்துறை அலுவலர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு உள்ளீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்' எனப் பாராட்டி, அதனை ரீட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: விசாகப்பட்டினம் கிழக்கு கடற்படை தளத்துக்கு இந்திய கடற்படைத் தலைவர் வருகை