கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையினால் ஊரடங்கு அமலில் இருப்பதன் காரணமாக மக்கள் வீட்டில் இருக்கின்றனர். வாய்க்கு ருசியாக சாப்பிட்டு பழக்கப்பட்ட இறைச்சி பிரியர்களும் தற்போதைய ஊரடங்கினால் வீட்டிற்குள் தவித்து வருகின்றனர்.
மேலும் இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் செய்து வந்ததால் பல நகரங்களில் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டன. அதேபோல் மீன் மார்கெட்டும் மூடப்பட்டது. தற்பொழுது ஞாயிற்றுக்கிழமை மட்டும் என்ற அனுமதியோடு சில இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை அம்பத்தூரில் உள்ள இறைச்சிக் கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. கோழிக்கறி கிலோ 220 ரூபாய், ஆட்டுக்கறி கிலோ 900 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.