சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "கள் மீதான தடை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு இழைத்து வரும் அநீதியாகும். கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. இதற்கு தமிழ்நாட்டில் மட்டும் 33 ஆண்டுகளாக தடை போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
இத்தடையை நீக்கக்கோரி வரும் 23ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னம்பலத்தில் கள் இறக்கும் அறப்போராட்டம் நடைபெறும். கள் குடித்து போதை ஏறுகிறது என்பதை நிரூபித்தால், 10 கோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்தும், யாரும் நிரூபிக்க முடியவில்லை. மேலும், மார்ச் 13 ஆம் தேதி கள் ஆதரவு மாநாடு ஈரோட்டில் நடைபெறும். இந்த மாநாடு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்.
கள்ளில் கலப்படம் இருப்பதால் தடை செய்யப்பட்டது என அரசு கூறுகிறது. பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, புதுச்சேரி ஆகியவற்றில் கள்ளில் கலப்படத்தை தடுக்க முடிகிறது எனும்போது, ஏன் தமிழ்நாடு அரசால் கலப்படத்தை தடுக்க முடியாது? இதிலிருந்தே தெரிகிறது இங்குள்ள ஆட்சியினருக்கு ஆளுமை இல்லை.
காவல்துறை அனுமதி தராவிட்டாலும் திட்டமிட்டபடி கள் இறக்கும் போராட்டமும், மாநாடும் கண்டிப்பாக நடைபெறும். முடிந்தால் வந்து தொட்டு பார்க்கட்டும்" என்று சவால் விடுத்தார்.
இதையும் படிங்க: மதுரையில் குடிநீர் ஆய்வு மாதிரித்திட்டம் தொடக்கம்!