தமிழ்நாட்டில் ஏற்கெனவே திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். மேலும் செஞ்சி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மஸ்தானுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, சிசிச்சைக்குப் பின்பு வீடு திரும்பினார்.
இதேபோல அதிமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சூழலில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சி.வெ. கணேசனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தற்போது கரோனா உறுதியான நிலையில், அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.