தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16,43,347 விவசாயிகளின் 12,110.74 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், 9 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நாளை சென்னை வருகை! - பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்!