ETV Bharat / city

ஐஐடியில் ஆராய்ச்சிக்கென 'வி.பாலகிருஷ்ணன் இன்ஸ்டிடியூட் சேர்' அமைப்பு உருவாக்கம்! - chennai IIT

ஆராய்ச்சித் துறை மற்றும் கற்பித்தலில் கவனம் செலுத்துவதற்காக சென்னை ஐஐடி 'வி.பாலகிருஷ்ணன் இன்ஸ்டிடியூட் சேர்' (V. Balakrishnan Institute Chair) என்ற அமைப்பை தொடங்கியுள்ளது.

ஐஐடி யில் ஆராய்ச்சிக்கென 'வி.பாலகிருஷ்ணன் இன்ஸ்டிடியூட் சேர்' அமைப்பு உருவாக்கம்

author img

By

Published : Jul 19, 2022, 6:34 PM IST

சென்னை: இயற்கை அறிவியல், கணிதம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் கவனம் செலுத்துவதற்காக ஐஐடி-சென்னை 'வி.பாலகிருஷ்ணன் இன்ஸ்டிடியூட் சேர்' (V. Balakrishnan Institute Chair) என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளது.

துகள் இயற்பியல், பல-உடல் கோட்பாடு மற்றும் திடப்பொருட்களின் இயந்திர நடத்தை உட்பட பல துறைகளிலும் பகுதிகளிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு புகழ்பெற்ற இந்திய தத்துவார்த்த இயற்பியலாளரும், ஐஐடி-சென்னையின் முன்னாள் பேராசிரியருமான வி.பாலகிருஷ்ணனின் நினைவாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதற்கான நன்கொடையை ஐஐடி-சென்னையின் முன்னாள் மாணவரான சதீஷ் ராமகிருஷ்ணா வழங்கியுள்ளார். இவர் நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஹெட்ஜ் வென்ச்சர் கேபிடல் நிறுவனமான 'டூ சிக்மா இன்வெஸ்ட்மென்ட்ஸின்' நிர்வாக இயக்குநராகவும், தலைமை இடர் அலுவலராகவும் பணியாற்றுகிறார்.

மேலும் சதீஷ் ராமகிருஷ்ணா, ஐஐடி-சென்னையின் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையின் 1987ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவர்.

இதுகுறித்து ஐஐடி-சென்னையின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி பேசுகையில், ’ஐஐடி-சென்னையில் பணியாற்றிய சிறந்த ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களில் பேராசிரியர் வி.பாலகிருஷ்ணனும் ஒருவர். மேலும் அவர் ஐஐடி-சென்னையில் மிகவும் விரும்பப்படும், மதிக்கப்படும் மற்றும் போற்றப்படும் ஒருவர் ஆவார்’ எனத் தெரிவித்தார்.

நிகழ்வின் போது பேசிய, டூ சிக்மா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை இடர் அலுவலருமான சதீஷ் ராமகிருஷ்ணா, ’பேராசிரியர் வி.பாலகிருஷ்ணன் தீவிர பகுப்பாய்வாளர் மற்றும் அறிவார்ந்த அணுகுமுறையைப் பின்பற்றும் வாழ்க்கைக்கான பகுத்தறிவு அணுகுமுறையின் சிறந்த தொடர்பாளர்’ எனத் தெரிவித்தார்.

பேராசிரியர் எமரிடஸ் கூறுகையில், “எனது அனுபவத்தின் அடிப்படையில், நீங்கள் ஒரு விஷயத்தை அறிந்தால், அதைப் பற்றி உங்களுக்கு முழுமையாகத் தெரியும் பட்சத்தில், எல்லோரும் அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் ஒருபோதும் கருதக்கூடாது", என்றார்.

மேலும், “ஐஐடி-மெட்ராஸின் எதிர்காலம் குறித்து நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். கடந்த 40 ஆண்டுகளில் கல்வி நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் பல்வேறு பங்குதாரர்களின் முயற்சியால் தரவரிசை மேம்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: கடலுக்கு அடியில் எண்ணெய் நிறுவனத்தின் கட்டமைப்பை ஆய்வு செய்ய புதிய மென்பொருள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.