சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
அதனடிப்படையில், பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
சென்னை வந்த கரோனா தடுப்பூசிகள்
இந்நிலையில் இன்று (செப்.03) புனேவில் இருந்து விமானம் மூலம் 66 பார்சல்களில் ஏழு லட்சத்து 81 ஆயிரத்து 860 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, குளிர்சாதன வாகனம் மூலம், சென்னை டிஎம்எஸ் வளாகத்திலுள்ள தடுப்பூசி சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை அலுவலர்கள் இந்தத் தடுப்பூசிகளை பற்றாக்குறையுள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இன்று (செப்.03) மாலை 85 ஆயிரத்து 140 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வரவுள்ளன.
இதையும் படிங்க: சரக்கு வேணுமா அப்போ தடுப்பூசி போடு! - மதுப்பிரியர்கள் அதிர்ச்சி