சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஜனவரி 31) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 105 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் தமிழ்நாட்டில் 19 ஆயிரத்து 276 பேருக்கும், சவுதி அரேபியா, இலங்கையிலிருந்து வந்த இரண்டு பேருக்கும் என 19 ஆயிரத்து 280 பேருக்கும் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 25 ஆயிரத்து 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 31 லட்சத்து ஒன்பதாயிரத்து 526 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தனியார் மருத்துவமனையில் ஏழு பேரும், அரசு மருத்துவமனையில் 13 பேரும் என 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 564 என உயர்ந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தலுக்கும் கரோனா பரவலுக்கும் சம்பந்தம் கிடையாது - ஜெ. ராதாகிருஷ்ணன்