ETV Bharat / city

மீண்டும் கரோனா அதிகரிப்பு... மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... - covid cases hike in india

மாணவர்களிடையே கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதால், பள்ளிகளை மூட மாநில அரசுகள் திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்
author img

By

Published : Dec 16, 2021, 5:43 PM IST

நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2ஆம் அலை குறைந்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதம் முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறக்கப்பட்டு, ஒரு மாதம் மட்டுமே முடிந்துள்ள நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் 426 மாணவர்களும், கர்நாடக மாநிலத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 107 மாணவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் 50 மாணவர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலை மாணவர்கள் 9 பேருக்கும், செவிலியர் கல்லூரி மாணவிகள் 12 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் இந்தியாவில் அதிகரிக்கும்

இப்படிபட்ட சூழலில், பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் மட்டும் 78,610 பேருக்கும், அமெரிக்காவில் 1 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் பள்ளி, கல்லூரிகளை மூடல அரசு திட்டமிட்டுவருகிறது. இந்தியாவில் அடுத்த மாதத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் மாணவர்களின் நலன் கருதி மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விரைவில் அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: மாணவர்களிடையே உருமாற்றம் அடைந்த கரோனா; பள்ளிகளை மூட உத்தரவு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.