ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 1707 பேருக்கு தொற்று உறுதி

corona update
corona update
author img

By

Published : Nov 19, 2020, 6:32 PM IST

Updated : Nov 19, 2020, 8:14 PM IST

18:26 November 19

தமிழ்நாட்டில் மேலும் 1707 பேருக்கு தொற்று உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 19) புதிதாக 1707 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "சென்னையில் கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய மேலும் ஒரு தனியார் ஆய்வகத்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 213ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று மேலும் 66 ஆயிரத்து 365 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த ஆயிரத்து 704 பேருக்கும், மேற்கு வங்கம், பிகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என ஆயிரத்து 707 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 10 லட்சத்து 49 ஆயிரத்து 131 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 7 லட்சத்து 64 ஆயிரத்து 989 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறிய முடிந்தது. அவர்களில், தற்போது தனிமைப்படுத்தும் மையங்கள், மருத்துவமனைகளில் 13,907 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 2551 நபர்கள் இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 39 ஆயிரத்து 532ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனைகளில் ஏழு பேரும், அரசு மருத்துவமனைகளில் 12 பேரும் என மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 550ஆக உயர்ந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட  வாரியாக மொத்த பாதிப்பு:

சென்னை -  2,10,601

கோயம்புத்தூர் - 47,071

செங்கல்பட்டு  - 46,418

திருவள்ளூர்  - 40,037

சேலம் - 29,048

காஞ்சிபுரம் -  27,051

கடலூர் - 23,947

மதுரை -  19424

வேலூர்  - 18,926

திருவண்ணாமலை - 18,392

தேனி - 16,476

தஞ்சாவூர் - 16,130

விருதுநகர் -  15,725

தூத்துக்குடி - 15,507

கன்னியாகுமரி - 15,485

ராணிப்பேட்டை - 15,443

திருநெல்வேலி -  14,663

விழுப்புரம் - 14,387

திருப்பூர்  - 14,608

திருச்சிராப்பள்ளி - 13,148

ஈரோடு - 11,780

புதுக்கோட்டை - 10,984

கள்ளக்குறிச்சி - 10,576

திண்டுக்கல் - 10,093

திருவாரூர் - 10,239

நாமக்கல் - 10,044

தென்காசி - 7962

நாகப்பட்டினம் - 7352

திருப்பத்தூர்  - 7107

நீலகிரி - 7176

கிருஷ்ணகிரி - 7197

ராமநாதபுரம் - 6147

சிவகங்கை - 6187

தருமபுரி - 5922

அரியலூர் - 4520

கரூர் - 4638

பெரம்பலூர் - 2232

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 990

ரயில் மூலம் வந்தவர்கள் - 428
 
Last Updated : Nov 19, 2020, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.