ETV Bharat / city

கரோனா தொற்று பாதிப்பு: வீட்டில் தனிமைப்படுத்தி 74, 533 பேர் கண்காணிப்பு!

சென்னை: தமிழகத்தில் கரோனா பாதித்த வெளிநாடுகளில் இருந்து வந்த 74 ஆயிரத்து 533 பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, 28 நாட்களுக்கு தொடர் கண்காணிப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

COVID-19 update
Rajiv Gandhi govt. hospital
author img

By

Published : Mar 30, 2020, 11:30 PM IST

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த தகவலில்," சமீபத்தில் ஏற்பட்ட கோவிட்-19 வைரஸ் தாக்குதல் காரணமாக 203 நாடுகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை என நான்கு முக்கிய விமான நிலையங்களில் வருகைப்புரிந்த 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பயணிகளுக்கு விமான நிலையங்களில் வைத்து வெப்ப(தெர்மல் ஸ்கிரீனிங்) பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 74 ஆயிரத்து 533 பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும், கரோனா தொற்று அதிக அளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 79 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவமனையில் தனி வார்டில் 364 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.

இதுவரை 2,040 பயணிகளின் ரத்தப் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன. அதில், 1,920 பயணிகளின் ரத்த மாதிரிகள் முடிவுகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 1,853 பயணிகளுக்கு நோய் தொற்று இல்லை எனவும், 67 பேருக்கு நோய்தொற்று உள்ளது என கண்டறியப்பட்டது . தற்போது 120 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை ஆய்வில் இருந்து வருகின்றது.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை மாவட்டத்தில் 22 , ஈரோடு மாவட்டம் 24, சேலம் மாவட்டம் 6, மதுரை மாவட்டத்தில் 4 , செங்கல்பட்டு மாவட்டம் 2 பேர் என மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதேபோல் திருநெல்வேலி, திருப்பூர், கோவை, வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், விருதுநகர், கரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 74,533 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவமனைகளில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்ற ஆறு பேர் குணமடைந்து உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக தொடர் கண்காணிப்பில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை வருமாறு:

சென்னை - 16, 767

கன்னியாகுமரி - 3,707

திருச்சி - 3,045

சிவகங்கை - 2,436

தஞ்சாவூர் - 4,479

புதுக்கோட்டை - 2,716

நாகப்பட்டினம் - 3,011

திருநெல்வேலி - 2,252

ஈரோடு மாவட்டம் - 889 பேர்

இதையும் படிங்க:தனிமைப்படுத்துதல்: தப்பியவா்களை கண்டுபிடிக்க மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.