தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ”நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துவருகிறார். மொழிமாற்றத்திற்கான மென்பொருள் உருவாக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேர் விடுதலையில் முதலில் முயற்சி எடுத்தது ஜெயலலிதாதான். இவ்வழக்கில் இன்று நீலி கண்ணீர் வடிப்பவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமையும். எதிர்க்கட்சித்தலைவர் முதலில் அவர் பணியை செய்ய வேண்டும், முதலமைச்சர் மீது பொறாமைகொண்டு அவர் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
மத்திய அமைச்சராக 9 முறை இருந்த ப.சிதம்பரம், தமிழ்நாட்டிற்கு எந்த நலனும் செய்யாமல் தன் குடும்ப நலனுக்காவே செயல்பட்டார். இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, ஒரு முறைகூட தமிழ்நாட்டிலிருந்து ஆளுநர்களை தேர்வு செய்யவில்லை. தற்போது பாஜக அரசு தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழிசையை முதல் பெண் ஆளுநராக நியமித்தற்கு பாராட்டுகள்” என்றார்.
Intro:Body:
அமைச்சர் சி.வி சண்முகம் பேட்டி:
தமிழ் மொழியில் தீர்ப்பு மொழிமாற்றம் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். முதல்வர் அதற்கான அனைத்து நடவடிக்கையையும் எடுப்பதாக கூறியுள்ளார்.
மேலும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் மொழி மாற்றம் செய்ய பரிசீலனை செய்வதாக உயர்நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதுகுறித்த மென்பொருள் உருவாக்குவதன் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசை குறை சொல்ல எந்த கட்சிக்கும் அருகதை கிடையாது.
7 பேர் விடுதலையில் முதலில் முயற்சி எடுத்தது ஜெயலலிதா தான். ஆனால் இன்று நீலி கண்ணீர் வடிப்பவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
ஆளுனர் இதுகுறித்து நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்
முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து ஸ்டாலின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ஸ்டாலின் முதலில் அவர் பணியை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
முதல்வர் நல்ல முதலீட்டுடன் திரும்பி வருவார்.
ஆனால் இங்குள்ள எதிர்க்கட்சி தலைவர் பொறாமையுடன் இதுகுறித்து பேசி வருகிறார்
மத்திய அமைச்சராக 9 முறை இருந்த பா.சிதம்பரம், தமிழகத்திற்கு எந்த நலனும் செய்யாமல் தன்னுடைய குடும்பத்திற்கு மட்டும் நலன் கிடைக்கும் வகையில் செய்துள்ளார். மேலும் அவர் ஒரு கேடி என குறிப்பிட்டார்.
இந்தியாவில் இவ்வளவு ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் ஒரு முறை கூட தமிழகத்தில் இருந்து ஆளுநராக நியமிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய சி.வி.சண்முகம்,
ஆனால் தற்போது பாஜக அரசு தமிழகத்தை சேர்ந்த தமிழிசையை முதல் பெண் ஆளுநராக நியமித்தற்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக கூறினார்
ஒரு பெண்மணியாக இருக்கின்ற தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானாவின் முதல் கவர்னர் மற்றும் பெண் கவர்னராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
அதிமுக, பாஜக உடன் இணைந்து செயல்படாமல், தனித்து செய்லபட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கருத்து குறித்த கேள்விக்கு, அதிமுகவிற்கும், சுப்பிரமணிய சுவாமிக்கும் என்ன சம்பந்தம் என்றும், அவர் யார் எங்களை பற்றி பேச என்று தெரிவித்தார்.
Visual sent
Conclusion: