ETV Bharat / city

பயிற்சியாளர் கெபிராஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது!

பயிற்சியாளர் கெபிராஜ் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிய வாய்ப்புள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்
author img

By

Published : Jun 16, 2021, 4:39 PM IST

சென்னை: பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பயிற்சியாளர் கெபிராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா நகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர், போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். அங்கு பயின்ற ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அண்ணாநகர் மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் அவரை இரண்டு நாள்கள் காவல்துறையினர் விசாரித்தனர். இந்தநிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏழு ஆண்டுகளுக்கு பின்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பொய்ப்புகார். மனுதாரர் இரண்டு வாரங்களுக்கு மேலாக நீதிமன்ற காவலில் உள்ளார். அவரை காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து விட்டனர். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.

காவல்துறையினர் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மனுதாரர் புகார் அளித்துள்ள மாணவியிடம் மட்டுமல்லாமல், தன்னிடம் பயிற்சி பெற்ற வேறு சில மாணவிகளிடமும் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். அதில், சிறுமிகளும் அடங்குவர். தனக்கு 13 வயதாக இருக்கும் போது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படலாம் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிய வாய்ப்பு உள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தற்காப்பு கலைப் பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.