சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் கல்லறை சாலை- எம்.சி. சாலை சந்திப்பில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 2020 ஆண்டு ஜூலை 18ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆட்டோ ஒன்றில் மூன்று பேர் சேர்ந்து கஞ்சாவை பொட்டலங்களாக போட்டு விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து பவுடர் ரவி, சின்னதுரை, பாம்பு நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி. திருமகள் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜரானார்.
இந்நிலையில். மூவர் மீதான குற்றச்சாட்டுகளையும் சந்தேகத்திற்கு இடமின்றி காவல்துறை நிரூபித்துள்ளதாக தெரிவித்த நீதிபதி திருமகள், மூவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: விமானத்தில் வந்து தொடர் திருட்டு; 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது