ETV Bharat / city

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை... காவல் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு...

தனியார் நகைக்கடன் வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அமல்ராஜ் ஜாமீன் கோரிய மனுவிற்கு பதில் அளிக்க அரும்பாக்கம் காவல்துறைக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 29, 2022, 2:02 PM IST

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான ஃபெட் பேங்கில் ஆக. 13ஆம் தேதி தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அதே வங்கியில் பணியாற்றிய முருகன் தனது கூட்டாளியுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான சூர்யா, சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான சந்தோஷின் உறவினரான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் கொள்ளை போன நகைகளில் 3.5 கிலோ நகைகள் மறைத்து வைத்திருந்தது விசாரனையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த நகைகளை மீட்ட போலீசார், கொள்ளை போன நகைகளை மறைத்து வைக்க உதவியாக இருந்ததாக அமல்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஆய்வாளர் அமல்ராஜ் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் தான் ஒரு அப்பாவி எனவும், இந்த வழக்கில் காவல்துறை தன்னை தவறாக சேர்த்துள்ளதாகவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனை ஏற்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த மனு மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சென்னை அரும்பாக்கம் காவல்துறை இதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்ட செப்டம்பர் 5 ஆம் தேதிக்கு விசாரணை தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: கனல் கண்ணன் ஜாமின் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.