ETV Bharat / city

அம்மா உணவகத்தில் சப்பாத்தி கிடைக்காதது ஏன்? சென்னை மாநகராட்சி விளக்கம் - chapati stop

சென்னையில் கடந்த சில நாள்களாக அம்மா உணவகங்களில் சப்பாத்தி வழங்கப்படாதது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் நிலமை குறித்து சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.

அம்மா உணவகங்களில் சப்பாத்தி இல்லை
அம்மா உணவகங்களில் சப்பாத்தி இல்லை
author img

By

Published : Oct 21, 2021, 6:12 AM IST

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் சப்பாத்தி வழங்கப்படாததால் திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை மாநகராட்சியின் 403 அம்மா உணவகங்களிலும் இரவு உணவு வேளையில் சப்பாத்தி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு நிதி நெருக்கடி நிலையிலும் இந்த அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அம்மா உணவகங்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாகவும், உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, எண்ணெய், சமையலுக்குத் தேவையான பொருள்கள் கூட்டுறவு பண்டக சாலையில் இருந்து பெறப்பட்டு வருகின்றன.

சப்பாத்தி வழங்காதது குறித்த விளக்கம்

இவ்வாறு பெறப்படும் பொருள்களில் கோதுமை தனியார் ஆலைகளில் மாவாக அரைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோதுமை அரைக்கும் தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக கடந்த 10 நாள்களாக ஒருசில மண்டலங்களிலுள்ள ஒருசில அம்மா உணவகங்களில் மட்டும் சப்பாத்தி வழங்குவதற்குப் பதிலாக இரவு நேரத்தில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது.

தற்போது தனியார் ஆலையில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்து அம்மா உணவகங்களிலும் சப்பாத்தி இரவு வேளைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தேவையான சமையல் பொருள்களும் அனைத்து அம்மா உணவகங்களுக்கும் எப்போதும்போல வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர சென்னையிலுள்ள 403 அம்மா உணவகங்களில் பணியிலுள்ள எந்த ஒரு சுய உதவிக்குழு உறுப்பினரும் பணியில் இருந்து நீக்கப்படவில்லை. அனைத்து அம்மா உணவகங்களிலும் விற்பனைக்கு ஏற்ப சமச்சீராக இருக்கும் வகையில் உறுப்பினர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்" எனக் குறிப்படப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அம்மா உணவகத்தை மூட திட்டம்? - வெடிக்கும் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.