சென்னை: பிப்ரவரி 19ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் மற்றும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் எடுத்துவருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் உள்ள 200 வார்டுக்கு மொத்தம் 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அங்கு தேர்தலுக்கு தேவையான அனைத்து பணிகள் மற்றும் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு ஒரு சிசிடிவி கேமரா என 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான 600 வாக்குச்சாவடிகளில் நேரலையில் (web streaming) கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறாக, மொத்தமுள்ள மையங்களில் 5 ஆயிரத்து 794 சிசிடிவி கேமரா மற்றும் 54 வாக்குப்பதிவு பாதுகாப்பு இடங்கள் (strong room) 324 என சிசிடிவி கேமராக்கள் மொத்தம் 6 ஆயிரத்து 118 சிசிடிவி கேமரா பொருத்தப்படவுள்ளன.
இது மட்டுமில்லாமல் வாக்கு எண்ணும் மையங்கள், அதன் பொது வழிகளில் சேர்த்து 740 சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் சென்னையில் தேர்தல் பணிகள் அனைத்தும் சிசிடிவி கேராக்கள் மற்றும் நேரலையாக கண்காணிக்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக மொத்தம் 5 கோடியே 88 லட்சம் 32 ஆயிரத்து 617 ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியுள்ளதுடன், விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: ராகுலின் எழுச்சியூட்டும் உரைக்கு தமிழர்கள் சார்பாக நன்றி... முதலமைச்சர்...