ETV Bharat / city

விடாமல் துரத்தும் கரோனா - எண்ணிக்கை குறையாத தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று(ஜன.25) புதிதாக 30 ஆயிரத்து 55 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

coronavirus infection update
கரோனா வைரஸ் தொற்று
author img

By

Published : Jan 25, 2022, 9:07 PM IST

Updated : Jan 25, 2022, 10:47 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மூன்றாவது அலையில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் புதிதாக இன்று(ஜன.25) 30 ஆயிரத்து 55 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 270 என உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி 48 பேர் இறந்துள்ளனர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஜனவரி 25ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 62 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 30 ஆயிரத்து 39 நபர்களுக்கும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 16 நபர்களுக்கும் என 30 ஆயிரத்து 55 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 98 லட்சத்து 82 ஆயிரத்து 950 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 31 லட்சத்து 94 ஆயிரத்து 260 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது.

இவர்களில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 270 பேர், தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் 25 ஆயிரத்து 221 நபர்கள் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 45 ஆயிரத்து 678 உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 26 நோயாளிகள், அரசு மருத்துவமனையில் 22 நோயாளிகள் என 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 312 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக 6,241 நபர்கள், கோயம்புத்தூரில் 3,763 நபர்கள், செங்கல்பட்டில் 1,737 நபர்கள், ஈரோட்டில் 1,229 நபர்கள், கன்னியாகுமரியில் 1,217 நபர்கள், சேலத்தில் 1,087 நபர்கள், தஞ்சாவூரில் 1,104 நபர்கள், திருப்பூரில் 1,490 நபர்கள் எனப் பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 27.8 விழுக்காடு நபர்களுக்கும், திருப்பூரில் 27.4 விழுக்காடு நபர்களுக்கும் பாதிப்பு பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்றுப் பரவல் வேகமாக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாடு தேசிய கட்சிகளும் போராட வேண்டும் - மாநில தலைவர் விஸ்வநாதன்

Last Updated : Jan 25, 2022, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.