ETV Bharat / city

மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைப்பு! - ராதாகிருஷ்ணன்

சென்னை: அனைத்து மாவட்டங்களுக்கும் கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ias
ias
author img

By

Published : Jan 12, 2021, 8:24 PM IST

கரோனா தடுப்பூசி வரும் 16 ஆம் தேதி முதல் போடப்படவுள்ள நிலையில், புனேவிலிருந்து தமிழகத்திற்கு இன்று தடுப்பு மருந்துகள் வந்து சேர்ந்தன. அவை சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு நிலையத்தில் இருந்து, 10 மண்டல சேமிப்பு கிடங்குகளுக்கு, அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து 45 சுகாதார மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டன.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் குளிர்பதன தொடர் நிலையத்திற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னுரிமை அடிப்படையில் சுகாதாரப் பணியாளர்களுக்கும் அடுத்ததாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

மண்டலங்கள்தடுப்பூசி மருந்துகள்
1சென்னை 1,18,000
2கடலூர் 25.500
3திருச்சி42,200
4தஞ்சாவூர்28,600
5மதுரை 54,100
6சிவகங்கை19,000
7திருநெல்வேலி 51,700
8வேலூர் 42,100
9சேலம் 59,800
10கோயம்புத்தூர்73,200

சென்னை மண்டலத்திற்கு 1 லட்சத்து 18 ஆயிரம் தடுப்பூசி மருந்துகளும், கடலூர் மண்டலத்திற்கு 25,500 மருந்துகளும், திருச்சிக்கு 40,200 மருந்துகளும், தஞ்சைக்கு 28,600 மருந்துகளும், மதுரைக்கு 54,100 மருந்துகளும், சிவகங்கை மண்டலத்திற்கு 19,000 மருந்துகளும், நெல்லைக்கு 51,700 மருந்துகளும், வேலூருக்கு 42,100 மருந்துகளும், சேலத்திற்கு 59,800 மருந்துகளும், கோவைக்கு 73,200 மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துள்ளனர். விருப்பத்தின் பேரிலேயே முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. பதிவு செய்வதற்காக ஜனவரி 25 வரை முன்களப் பணியாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 28 லட்சம் ஊசிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைப்பு!

தொடர்ந்து பேசிய, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண் இயக்குநர் உமாநாத், ”பள்ளிகள் திறக்கபட இருக்கும் சூழ்நிலையில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 4 கோடி நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன. அவை இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து மாவட்டப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவிட்-19: இந்தியாவில் ஏழு மாதங்களில் இல்லாதளவிற்கு குறைவான பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.