இந்தியாவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. மூன்று கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், கரோனாவின் தாக்கம் இங்கு குறைந்தபாடில்லை. இச்சூழலில் இன்றிலிருந்து வரும் 31 ஆம் தேதி வரை, நான்காம் கட்டமாக ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஒவ்வொரு நாளும் தொற்றின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கரோனா தடுப்பு அலுவலர்கள் அதிகம் பாதிப்புள்ள மண்டலங்களை ஆய்வு செய்து, முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சென்னை - தேனாம்பேட்டை 124ஆம் வார்டில், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து கரோனா தடுப்பு சிறப்பதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கிருக்கும் மக்களுக்கு ஒலிப் பெருக்கி மூலம் கரோனா விளைவுகள் பற்றி எடுத்துக் கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: கோடம்பாக்கத்திலும் 1,000ஐ தாண்டிய கரோனா பாதிப்பு!