சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சுமார் 2.11 கோடி ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருள்களை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மாதம் 3ஆம் தேதி முதல், கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட 14 வகை மளிகை பொருள்களை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டத்தில் என்ன பேசினார் ஸ்டாலின்?