இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று (நவ. 17) ஆயிரத்து 652 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 18 பேர் உயிரிழந்தனர். இரண்டாயிரத்து 314 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அதன்படி, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்து 61 ஆயிரத்து 568ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை ஏழு லட்சத்து 34 ஆயிரத்து 970ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 513ஆக உள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து 85 பேர் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து ஐந்து நாள்களாக இரண்டாயிரத்திற்கு கீழ் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், சென்னையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய புதிதாக இரண்டு தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மொத்தமாக இதுவரை ஒரு கோடியே ஒன்பது லட்சத்து 16 ஆயிரத்து 522 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் ஏழு லட்சத்து 61 ஆயிரத்து 568 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை மாவட்டம் - 2,09,646
- கோயம்புத்தூர் மாவட்டம் - 46,757
- செங்கல்பட்டு மாவட்டம் - 46,146
- திருவள்ளூர் மாவட்டம் - 39,797
- சேலம் மாவட்டம் - 28,931
- காஞ்சிபுரம் மாவட்டம் - 26,899
- கடலூர் மாவட்டம் - 23,866
- மதுரை மாவட்டம் - 19,371
- வேலூர் மாவட்டம் - 18,804
- திருவண்ணாமலை மாவட்டம் - 18,336
- தேனி மாவட்டம் - 16,457
- தஞ்சாவூர் மாவட்டம் - 16,085
- விருதுநகர் மாவட்டம் - 15,696
- தூத்துக்குடி மாவட்டம் - 15,480
- கன்னியாகுமரி மாவட்டம் - 15,459
- ராணிப்பேட்டை மாவட்டம் - 15,391
- திருநெல்வேலி மாவட்டம் - 14,639
- விழுப்புரம் மாவட்டம் - 14,346
- திருப்பூர் மாவட்டம் - 14,433
- திருச்சி மாவட்டம் - 13,094
- ஈரோடு மாவட்டம் - 11,704
- புதுக்கோட்டை மாவட்டம் - 10,961
- கள்ளக்குறிச்சி மாவட்டம் - 10,547
- திண்டுக்கல் மாவட்டம் - 10,078
- திருவாரூர் மாவட்டம் - 10,192
- நாமக்கல் மாவட்டம் - 9,978
- தென்காசி மாவட்டம் - 7,949
- நாகப்பட்டினம் மாவட்டம் - 7,271
- திருப்பத்தூர் மாவட்டம் - 7,079
- நீலகிரி மாவட்டம் - 7,144
- கிருஷ்ணகிரி மாவட்டம் - 7,140
- ராமநாதபுரம் மாவட்டம் - 6,134
- சிவகங்கை மாவட்டம் - 6,162
- தர்மபுரி மாவட்டம் - 5,905
- அரியலூர் மாவட்டம் - 4,512
- கரூர் மாவட்டம் - 4,612
- பெரம்பலூர் மாவட்டம் - 2,228
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 986
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: 'கரோனா காலத்தில் செயல்பட்ட அனைத்து மதத்தினர்' - பிரிட்டன் பிரதமர்!