சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் ஆண்டாள் நகரில் வசித்து வரும் முழு மாத கர்ப்பிணியான 25 வயது பெண்ணுக்கு கடந்த 25ஆம் தேதியன்று வீட்டிலேயே வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
பின்னர் பிரசவத்திற்காக கடந்த 29ஆம் தேதியன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கு அவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று வெளியான பரிசோதனை முடிவில் அப்பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
உடனே இவரை சுகாதாரத் துறை அதிகாரிகள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அப்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் குடியிருப்பில் வசிக்கும் நபர்கள் அனைவரையும் கரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய காவலர்