சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறியிருப்பதாவது, 'டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மேலும் மதுக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கரோனா முன்னெச்சரிகை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். மதுக்கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆறு அடி தனிநபர் இடைவெளி இருக்க வேண்டும்'.
நோ மாஸ்க்.. நோ மது..
மதுபான சில்லறை விற்பனை கடைகளை சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் ஒரு நாளைக்கு இரண்டு முறை தெளிக்கப்பட வேண்டும். மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கப்படும் பொழுது உட்புறமும் வெளிப்புறமும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, மதுபானம் வாங்க வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் இல்லாமல் மது வாங்க வரும் நபர்களுக்கு கட்டாயம் மதுபானங்கள் வழங்க கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.