தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும், கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துவருகிறது. இதுவரை, சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 4371 பேர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று மட்டும் சென்னையில் 538 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பாக ஈடுபட்டு வந்தாலும், பரவல் குறையாமல் அதிகரித்து வருகிறது.
அதன்படி, ராயபுரம் - 742 பேர், கோடம்பாக்கம் - 713 பேர், திரு.வி.க. நகர் - 590 பேர், தேனாம்பேட்டை - 458 பேர், வளசரவாக்கம் - 379 பேர், அண்ணா நகர் - 349 பேர், தண்டையார்பேட்டை - 327 பேர், அம்பத்தூர் - 224 பேர், அடையாறு - 212 பேர், திருவொற்றியூர் - 98 பேர், மாதாவரம் - 65 பேர், மணலி - 50 பேர், பெருங்குடி - 51 பேர், ஆலந்தூர் - 46 பேர், சோழிங்கநல்லூர் - 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 743 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து, தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:
மீண்டும் தேநீர்க் கடைகள்... இயல்பு நிலைக்குத் திரும்பிய சென்னை!