சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப் பரவல் சற்று அதிகரிப்பதாகத் தெரிகிறது. அவற்றைக் குறைக்க அந்தந்த மண்டலங்களில் அதிக மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு கரோனா பரவல் விகிதம் 30-க்கு மேலிருந்த நிலையில் தற்போது அவை மூன்றாக குறைந்துள்ளது. கரோனா வைரசிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடும் 87ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருபவர்கள் ஒரு விழுக்காடாக உள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்:
அண்ணா நகர் -24,594 பேர்
கோடம்பாக்கம் - 24,167 பேர்
தேனாம்பேட்டை - 21,419 பேர்
ராயபுரம் - 19,656 பேர்
அடையாறு - 18,139 பேர்
திரு.வி.க. நகர் - 17,840 பேர்
தண்டையார்பேட்டை - 17,140 பேர்
அம்பத்தூர் - 15,860 பேர்
வளசரவாக்கம் - 14,165 பேர்
ஆலந்தூர் - 9,209 பேர்
பெருங்குடி - 8,263 பேர்
மாதவரம் - 8,082 பேர்
திருவொற்றியூர் - 6,778 பேர்
சோழிங்கநல்லூர் - 5,957 பேர்
மணலி - 3,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னையில் இதுவரை மொத்தம் இரண்டு லட்சத்து 23 ஆயிரத்து 799 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு லட்சத்து 16 ஆயிரத்து 883 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
எஞ்சியுள்ள இரண்டாயிரத்து 932 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் மூன்றாயிரத்து 984 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதிய கரோனா வைரசால் மக்கள் பீதி: சிறப்பு விமானங்கள் ரத்து!