ETV Bharat / city

கட்டாயப்படுத்தி 17வயது சிறுமிக்கு திருமணம்: தந்தை கைது - marriage

சென்னை: கட்டாயப்படுத்தி 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தந்தையை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தந்தை கைது
author img

By

Published : Jul 4, 2019, 1:16 PM IST

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் நேதாஜி நகர் பிராதான சாலையைச் சேர்ந்தவர் ரமேஷ்(38), இவரது மனைவி தேவி(36). கணவன் - மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். முதல் மகள் ப்ரீத்தி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் ஏஞ்சல். மூன்றாவது மகள் பிரியா(17)

ஏஞ்சலுக்கும், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சிவா என்பவருக்கும், கடந்த மாதம் 12ஆம் தேதி திருமண நிச்சயம் நடைபெற இருந்தது. ஆனால், நிச்சயதார்த்தம் செய்வதற்கு முதல் நாள் ஏஞ்சல் தனது காதலனுடன் சென்றுவிட்டார்.

இதனையடுத்து, ரமேஷ் தனது மூன்றாவது மகளான பிரியாவை சிவாவிற்கு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து வைத்தார். மேலும், பிரியாவின் விருப்பமின்றி இந்த திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து பிரியாவின் தாய் தேவி, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, 17வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த ரமேஷை கைது செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள சிவாவையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Intro:ஆவடி அருகே 17வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த தந்தை கைது.Body:ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், நேதாஜி நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் தேவி(36). இவரது கணவர் ரமேஷ் (38). இவர், ஆவடி, கவுரிப்பேட்டை, ஆதிகேசவ நாயுடு தெருவில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 10ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 3மகள்கள் உள்ளனர். முதல் மகள் ப்ரீத்தி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் ஏஞ்சல். மூன்றாவது மகள் 17வயது சிறுமி ஆகியோர் தாய், தந்தை ஆகியோர் வீடுகளில் மாறி மாறி வசித்து வந்தனர். இந்நிலையில், ஏஞ்சலுக்கும், சென்னை, அயனாவரத்தில் சார்ந்த சிவா என்பவருக்கும், கடந்த மாதம் 12ந்தேதி திருமணம் நிச்சயம் நடைபெற இருந்தது. இதற்கிடையில் நிச்சயம் செய்வதற்கு முன்தினம் ஏஞ்சல், தனது காதலனுடன் சென்றுவிட்டார். இதனையடுத்து, ரமேஷ் தனது மூன்றாவது மகளான 17வயது சிறுமியை சிவாவுக்கு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து வைத்து உள்ளார். மேலும், அவளை விருப்பமின்றி 20நாட்கள் சிவாவுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தாய் தேவி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தை ரமேஷ் கைது செய்து நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள சிவாவை போலீசார் தேடி வருகின்றனர் இச்சம்பவம் ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.