சென்னை: கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படி அனுமதித்தல் தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பில், புதிய அகவிலைப்படி ஊதியத்தில் 14 விழுக்காடு அகவிலைப்படி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு குறித்து அரசாணையில் குறிப்பிடப்படவில்லை. அரசிடமிருந்து ஆணை பெற்று வழங்கப்படும் வரை நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:கோவை மாவட்ட ஆட்சியருக்கு கரோனா தொற்று