19 கிலோ வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்து ரூ.2,406 ஆக விற்பனை செய்யப்படுகிறது. எரிவாயு விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும். எனினும், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையில் உயர்வு இல்லை. பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை ரூ.107.45 ஆகவும், டீசல் விலை ரூ.97.52 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களில் பெட்ரோல், டீசல் விலை ஒன்பது முறை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இன்று(ஏப்ரல் 01) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்று விற்பனையான அதே விலையில் விற்கப்படுகிறது.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.81க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ.93.07க்கு விற்கப்படுகிறது.எரிவாயு விலை உயர்வால் டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் சிஎன்ஜி மற்றும் குழாய் மூலம் சமையல் எரிவாயு விலை 10-15 சதவீதம் உயரும் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'ரூ.30-க்கு விற்க வேண்டிய பெட்ரோல் ரூ.107-க்கு விற்பனை- கே.எஸ்.அழகிரி'