ETV Bharat / city

'பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' - எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை - பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

திமுக தேர்தல் வாக்குறுதியின்படி அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச்செயலாளர் சுபின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை
ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை
author img

By

Published : Apr 12, 2022, 12:43 PM IST

சென்னை: எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச்செயலாளர் சுபின் கூறியதாவது, "கடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் (எம்ஆர்பி) போட்டி தேர்வில் தேர்வுச் செய்யப்பட்ட 7,243 செவிலியர்கள் அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு 1,788 செவிலியர்களும், 2018 ஆம் ஆண்டு 800 செவிலியர்களும், 2019 ஆம் ஆண்டு 1,725 செவிலியர்கள் என சுமார் 11 ஆயிரத்து 500 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களில் தற்போது 8,000 செவிலியர்கள் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தப் பணி முடிந்த சுமார் 3,000 செவிலியர்கள் மட்டுமே இன்றுவரை படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 4,800 செவிலியர்கள் 6 முதல் 7 ஆண்டுகள் கடந்தும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள 424 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 பணியிடங்களில் இரண்டு பணியிடம் மட்டுமே நிரந்தர பணியிடமாகவும், 8 பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகின்றது.

மேலும் 1,870 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 4 செவிலியர் பணியிடங்களில், அதில் ஒரு பணியிடம் கூட நிரந்தர பணியிடமாக இல்லை. அனைத்து பணியிடங்களும் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஒப்பந்த முறையில் பணி செய்த செவிலியர்கள் அனைவரையும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றதும் அந்தந்த பணியிடத்திலேயே பணி நிரந்தரம் செய்தார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் வாக்குறுதியில் 356 இல் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதியளிக்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் எம்.ஆர்.பி ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் நுழைவுத் தேர்வின்றி பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.