ETV Bharat / city

கரோனா தொற்றிலிருந்து மீளும் சென்னை மாநகராட்சி

சென்னை: கரோனா தொற்று குறைந்துவருவதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் பூஜ்ஜியமாக மாறியுள்ளது என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

author img

By

Published : Jul 4, 2021, 6:39 PM IST

containment zones reduced to zero in chennai

சென்னை மாநகரில் கரோனா தொற்று பரவலின் வேகம் தொடர்ந்து குறைந்துவருகிறது. நோய் தொற்றை மேலும் குறைப்பதற்காக மாநகராட்சி தொடர்ந்து மருத்துவ முகாம் நடத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஒரு தெருவில் 10 நபர்களுக்கு மேல் நோய்தொற்று இருந்தால் அந்தப் பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்தது.

தற்போது தொற்று எண்ணிக்கை, சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை கனிசமாக குறைந்து 2, 446 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்ந நிலையில், எந்த ஒரு பகுதியிலும் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இல்லாததால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத நகரமாக மாறியுள்ளது சென்னை மாநகராட்சி.

தற்போதைய நிலவரப்படி 132 இடங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு உள்ளதாகவும் ஒவ்வொரு இடத்திலும் ஐந்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே தொற்று இருப்பதாகவும் மாநகராட்சி அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாதிப்புகள் உள்ள குறிப்பிட்ட இடங்களில் தொற்று அதிகரிக்காமல் தடுக்க கண்காணிப்பு நடைபெற்றுவருகிறது. மேலும் ஊரடங்கு தளர்வுகளில் பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.