ETV Bharat / city

'தாயின் மீது ஆணையாக ஓபிஎஸ், இபிஎஸ் சூளுரை!'

சென்னை: சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த கையோடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் இணைந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவோம் எனச் சபதம் எடுத்துள்ளதாக அமைச்சர் பெஞ்சமின் கூறினார்.

பெஞ்சமின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்

author img

By

Published : Feb 28, 2021, 11:38 AM IST

Updated : Feb 28, 2021, 12:09 PM IST

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில் மதுரவாயலில் அதிமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றி எவ்வாறு தேர்தலைச் சந்திப்பது, பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் சார்ந்த ஆலோசனைகளை அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார்.

பெஞ்சமின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்
பெஞ்சமின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்

ஒற்றுமையே... வெற்றி!

மேலும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் பெஞ்சமின் பேசுகையில், "தற்போது அமைந்துள்ள கூட்டணி மிக வலிமையான கூட்டணி. இந்தக் கூட்டணியை எவராலும் அசைத்துப் பார்க்க முடியாது, வெற்றிபெறவும் முடியாது.

தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

மேலும், சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த கையோடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என எல்லோரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று ஒற்றுமையுடன் இணைந்து இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவோம் எனச் சபதம் எடுத்துள்ளோம்" என்றார்.

Last Updated : Feb 28, 2021, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.