பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ராமசாமி, “தந்தையும் தாயும் இல்லாத குழந்தைகளுக்கு குடியுரிமை தருவார்களா? மாட்டார்களா? குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு மாநில அரசு துணை போவது, இவர்களுடைய பலவீனத்தைக் காட்டுகிறது. இந்தச் சட்டத்தை எதிர்த்தால் இவர்கள் மீது வழக்குகள் பாயும் என்று அஞ்சுகிறார்கள். மத்திய அரசிடம் மண்டியிடுகிறார்கள். நிதியமைச்சரின் பதிலுரையால் தமிழ்நாடு மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்பதால் வெளிநடப்பு செய்கிறோம்“ எனக் கூறினார்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர் அபுபக்கர் பேசும்போது, “குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தம், தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக, தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசியுள்ளோம். ஆனால், அரசுத் தரப்பில் அதை நிராகரித்து விட்டனர். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து பேசப்பட்டு இன்று நல்ல முடிவு இருக்கும் என்று எதிர்பார்த்துதான் வந்தோம். ஆனால் ஏமாற்றமே மிச்சம். எவ்வளவு பெரிய போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், அதைப்பற்றி துளியும் கவலையின்றி தமிழ்நாட்டு மக்களையும், அதிமுகவையும் மத்திய அரசிடம் அடமானம் வைக்கும் அளவிற்கு சென்றுவிட்டனர்“ என்றார்.
இதையும் படிங்க: பேச அனுமதி மறுப்பு - பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு!