ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெகன்மோகன் ரெட்டி, ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி, ஜெகன்மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், " நீங்கள் பிறந்த நாள் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்துடனும் நீண்ட நாட்கள் இருந்து ஆந்திராவை வளப்படுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேப்போல, திமுக தலைவர் ஸ்டாலின், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "ஆந்திர முதலமைச்சரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஆந்திர மக்களுக்கும், நாட்டுக்கும் பல ஆண்டுகள் நீங்கள் சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:
அதிரடி காட்டும் ஜெகன் அரசு: ஆந்திராவில் திஷா சட்டம் நிறைவேற்றம்!