சென்னை: சென்னை தியாகராய நகரில், கர்நாடக கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் தனியார் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்கு பயிலும் மாணவ மாணவியர்களை சாதியின் பெயரைச் சொல்லி திட்டுவதாகவும், செலுத்தப்படும் பள்ளி கட்டணத்தில் 50 சதவீதத்திற்கு தான் பள்ளியிலிருந்து ரசீது தருவதாகவும், அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், பள்ளியில் படித்து முடித்த பல மாணவர்களுக்கு ஓராண்டுகளாகியும் சான்றிதழ் தரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சத்தில், பத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜீவாலிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் - சசிகலா