முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை - 2021ஐ இன்று (நவ.20) வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளவை பின்வருமாறு:
- ஒரு பாதுகாப்பான சூழலில் ஆண்/ பெண் குழந்தைகள் தங்களுடைய முழு திறனையும் அடையும் வகையில் ஒவ்வொரு குழந்தையின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்தல், குழந்தைகளுக்கான நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் அடைதலே இலக்கு.
- ஒவ்வொரு குழந்தைகளையும் அனைத்து விதமான வன்முறை, தவறாக நடத்தப்படுதல், சுரண்டல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கவும், அவர்களுக்கு தரமான, சுகாதார பராமரிப்பு, கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும், அவர்கள் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினைகளிலும் அவர்களுடைய கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் சூழலை உருவாக்குதல்.
- எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கை கடைபிடிக்கப்படும்.
- ஐந்து வயது முடிந்த அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களுக்கு அருகாமையில் பள்ளிகள் அமைத்து குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை உறுதி செய்தல்.
- அனைத்து குழந்தைகளையும் பொறுப்புள்ள குடிமக்களாக மேம்படுத்த வழக்கமான பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அரசியலமைப்பு உரிமைகளை அறிமுகப்படுத்துதல்.
- அனைத்துப் பள்ளிகளையும் குழந்தைகள் பாதுகாப்புக்கு உகந்ததாக மாற்ற குழந்தை பாதுகாப்புக் கொள்கையை அனைத்து பள்ளிகளிலும் அறிமுகப்படுத்துதல்.
- பள்ளி அளவில் எழும் புகார்களை விசாரிக்க பாலியல் ரீதியாக தவறாக நடத்தப்படுவதில் இருந்து பாதுகாக்க போஷ் (POSH) சட்டத்தின்கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் புகார் குழுவை அமைத்தல்.
- குழந்தைகளை பாதுகாப்பதற்கென்றே பிரத்யேகமாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை அமைப்பை உருவாக்கி செயல்படுத்துதல்” ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஸ்டாலின் நேரில் ஆய்வு