ETV Bharat / city

சட்டவிரோத மது விற்பனை: தடுத்து நிறுத்தக்கோரி புகார்!

சென்னை: சட்டவிரோதமாக ஆன்லைனில் மது விற்பனை செய்வதைத் தடுத்து நிறுத்தக்கோரி வருத்தப்படாத வாக்காளர்கள் சங்கம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

complaint
complaint
author img

By

Published : Apr 27, 2020, 1:00 PM IST

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்துவருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூடியுள்ளனர்.

இதனால் போதைக்கு அடிமையான சிலர் மதுபானம் கிடைக்காததால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபானங்களைத் திருடிச் சென்றுள்ளனர். இதனால் டாஸ்மாக் கடையிலுள்ள மதுபாட்டில்கள் அரசு குடோன்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சிலர் விரக்தியில் சானிடைசர், வார்னிஷ் குடித்து உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

இந்நிலையில், வருத்தப்படாத வாக்காளர்கள் சங்கம் என்ற அமைப்பின் தலைவர் விஜயகுமார் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் அளித்துள்ள புகாரில், ”முகநூலில் ’எலைட் மதுபான கடை ஐடியில் ஆன்லைனில் புக் செய்தால் மதுபானங்கள் டோர் டெலிவரி செய்யப்படும்’ என அண்ணா நகர் சாந்தி காலனி முகவரி மற்றும் ’9983670439’ என்ற செல்பேசி எண்ணுடன் பதிவிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த நான், உடனே அந்த எண்ணைத் தொடர்புகொண்டு பேசியபோது, அந்த மதுபான கடையில் பணிபுரியும் ஒருவர் பேசினார். ஆன்லைனில் பாதி பணம் செலுத்தினால் மதுபாட்டிலை டோர் டெலிவரி செய்வதாகவும், தன்னிடம் அரசு அனுமதி பெற்ற பாஸ் இருப்பதால், அதனைக் காட்டி டோர் டெலிவரி செய்வதாகத் தெரிவித்தார்.

சட்டவிரோத மது விற்பனை - தடுத்து நிறுத்தக்கோரி புகார்!

அவர் மீது நம்பிக்கை இல்லாததால் உடனே தொடர்பை துண்டித்துவிட்டேன். மதுபான கடைகள் இல்லாததைப் பயன்படுத்தி போதைக்கு அடிமையான பலரிடம் இதுபோன்று பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் சட்டவிரோதமாக மோசடியில் ஈடுபட்டுவரும் அந்த அடையாளம் தெரியாத நபரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் விற்றவர் நாட்டு துப்பாக்கியுடன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.